உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் மௌரானிபூரில் ஒரு விசித்திரமான காதல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள சிவகஞ்ச் பகுதியைச் சேர்ந்த புஷ்பேந்திர வர்மா என்பவருக்கும், 22 வயது இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 2024-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இவர்களது இல்லத்திற்கு கிஷோர்புரா கிராமத்தின் 55 வயது பஞ்சாயத்து தலைவரான வீரேந்திர  அடிக்கடி வந்து சென்ற நிலையில், அவருக்கும் புஷ்பேந்திரவின் மனைவிக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்துள்ளது.

கணவன் பலமுறை எச்சரித்தும் கேட்காத அந்த பெண், கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி மாலை தனது 55 வயது காதலனுடன் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்துள்ளார்.

வெறும் கையுடன் செல்லாமல், வீட்டில் இருந்த சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க நகைகளையும் அந்தப் பெண் சுருட்டிச் சென்றுள்ளதாகக் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

தன்னை விட 33 வயது மூத்த நபருடன், அதுவும் திருமணமான ஒரு வருடத்திற்குள்ளேயே மனைவி ஓடியது புஷ்பேந்திராவை நிலைகுலைய வைத்துள்ளது.

தற்போது தலைமறைவாக உள்ள அந்தப் பெண்ணையும், பஞ்சாயத்து தலைவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 22 வயது இளம்பெண் தனது எதிர்காலத்தை மறந்து 55 வயது நபரைத் தேர்வு செய்துள்ள இந்தச் சம்பவம் ஜான்சி முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.