ராஞ்சியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ஒருவன், இலங்கை மற்றும் இந்தியா இடையே அமைந்துள்ள பாக் நீரிணையை (Palk Strait) நீந்திக் கடந்து உலக சாதனை படைத்துள்ளார்.
உலகின் மிக இளம் வயது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள இந்தச் சிறுவன், சுமார் 29 கிலோமீட்டர் தூரம் கொண்ட கடல் பகுதியை வெறும் 9 மணி நேரம் 50 நிமிடங்களில் நீந்திக் கடந்து அசத்தியுள்ளார்.
கடலின் சவால்களைத் தாண்டி, மிகக் குறைந்த நேரத்தில் இவ்வளவு பெரிய தூரத்தைக் கடந்துள்ள இந்தச் சிறுவனின் அசாத்திய சாதனை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், பலரது பாராட்டுகளையும் குவித்து வருகிறது.
