மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு எழுதத் தயாராகும் மாணவர்களுக்குத் தேசியத் தேர்வு முகமை (NTA) முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

கூகுள் மேப்பில் சில இடங்களில் தேர்வு மையங்கள் தவறாகக் காண்பிக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மாணவர்கள் குழப்பமடைய வாய்ப்புள்ளதால், தேர்வு மையம் அமைந்துள்ள இடங்களை முன்கூட்டியே நேரில் சென்றோ அல்லது பிற வழிகளிலோ சரியாகச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்கவும், சரியான நேரத்திற்குத் தேர்வு மையத்தைச் சென்றடையவும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்குமாறு மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.