தமிழக வெற்றிக் கழகத்தின் பனையூர் அலுவலகத்தில், அக்கட்சியின் வேட்பாளர்களுடன் நடைபெற்ற ரகசிய ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசியுள்ள சம்பவம் தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
தேர்தல் முடிவுகளுக்குப் பின் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கட்சி மாறுவது தமிழக அரசியலில் வாடிக்கையாகிவிட்ட நிலையில், அதனை முன்கூட்டியே தடுத்து நிறுத்தத் திட்டமிட்ட விஜய், “தேர்தலில் வென்ற பிறகு நீங்கள் என்னுடன் இறுதிவரை பயணிப்பீர்களா?” என வேட்பாளர்களின் கண்களைப் பார்த்து நேரடியாகவே உருக்கமாகக் கேட்டுள்ளார்.
விஜய்யின் இந்தக் கேள்வியால் அங்கிருந்த வேட்பாளர்கள் நெகிழ்ச்சியடைந்ததோடு, எத்தகைய நெருக்கடி வந்தாலும் தாரக மந்திரமான ‘தளபதியின் விசுவாசி’ என்ற அடையாளத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம் என உறுதி அளித்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
