சீனாவுடன் தூதரக உறவு வைத்துள்ள வளரும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு, சீனா அதிரடியாக பூஜ்ஜிய வரிச்சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி, ஆப்பிரிக்காவிலிருந்து சீனாவுக்கு இறக்குமதியாகும் குறிப்பிட்ட பொருட்களுக்கு இனி சுங்க வரி கிடையாது. இந்தச் சலுகை 2026 மே 1-ம் தேதி முதல் 2028 ஏப்ரல் 30-ம் தேதி வரை இரண்டு ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்று சீனாவின் சுங்கவரி ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் 53 ஆப்பிரிக்க நாடுகள் பயன்பெறும் என்றும், குறிப்பாக ஆப்பிரிக்க விவசாயப் பொருட்களைச் சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய ‘பசுமை வழித்தடம்’ உருவாக்கப்படும் என்றும் சீனா கூறியுள்ளது.
இதன் மூலம் இருதரப்பு வர்த்தகம் அதிகரிப்பதோடு, ஆப்பிரிக்க நாடுகளுடனான பொருளாதார உறவை மேம்படுத்தவும் சீனா திட்டமிட்டுள்ளது. வரும் காலங்களில் இந்தப் பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தத்தை மேலும் வலுப்படுத்தப் பேச்சுவார்த்தைகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
