இசை உலகின் ஜாம்பவான் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கௌதம் தின்னனுரி இயக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அவரது இசைப் பயணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைப் போராட்டங்களை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட உள்ளது. இதில் எம்.எஸ்.சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகை சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
ஆனால், தற்போது சாய் பல்லவிக்கு பதிலாக ருக்மிணி வசந்த் நடிக்கப்போவதாகத் தகவல்கள் பரவி வருகின்றன. இது குறித்து விசாரித்தபோது, சாய் பல்லவி நடிக்கும் பதிலாக ருக்மிணி வசந்த் நடிக்கப்போவதாகத் தகவல்கள் பரவி வருகின்றன. இது குறித்து விசாரித்தபோது, சாய் பல்லவி நடிக்கும் ‘ராமாயணம்’ உள்ளிட்ட மற்ற படங்களின் வேலைகள் தாமதமாவதால், இந்தப் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இசை அரசியின் கதாபாத்திரத்தைத் திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
