தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் வருகை, குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை ‘ஆக்சிஸ் மை இந்தியா’வின் எக்ஸிட் போல் முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன. 18 முதல் 19 வயது வரையிலான முதல்முறை வாக்காளர்களில் (First Time Voters) சுமார் 68 சதவீதம் பேர் தவெக-விற்கே தங்களது ஆதரவை வழங்கியுள்ளனர். அதேபோல, 20 முதல் 29 வயதுடைய இளைஞர்களில் 59 சதவீதம் பேர் விஜய்க்கு வாக்களித்துள்ளனர்.
இருப்பினும், 40 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் இப்போதும் திமுக பக்கமே தங்களது ஆதரவைத் தக்க வைத்துள்ளனர். மூத்த வாக்காளர்களின் அனுபவமும், இளம் வாக்காளர்களின் எழுச்சியும் நேருக்கு நேர் மோதும் இந்தத் தேர்தலில், இளைஞர்களின் பெரும் ஆதரவு விஜய்க்குச் சாதகமாக அமையுமா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தியாக இளைஞர்கள் உருவெடுத்துள்ளதையே இந்தக் கணிப்பு காட்டுகிறது.
