இந்திய கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரம் வைபவ் சூரியவன்ஷி, தனது கனிவான செயலால் இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளார். ஐபிஎல் ஏலத்தில் இளம் வயதிலேயே கோடிகளை அள்ளிய வைபவ், ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது, அவரைப் பார்க்க ஒரு சிறுவன் (நொடி ஃபேன்) நீண்ட நேரமாக ஹோட்டல் லாபியில் காத்துக்கொண்டிருந்தான். இதைக் கவனித்த வைபவ் சூரியவன்ஷி, அந்தச் சிறுவனிடம் நேராகச் சென்று பேசி, தனது கழுத்தில் இருந்த வரவேற்பு மாலையைக் கழற்றி அந்தச் சிறுவனுக்கு அணிவித்து அழகு பார்த்தார்.
होटल लॉबी में वेट कर रहा था नन्हा फैन, वैभव सूर्यवंशी ने पहना दी अपनी माला
वैभव सूर्यवंशी का एक दिल जीतने वाला वीडियो सामने आया है. दरअसल एक नन्हा फैन होटल लॉबी में उनका इंतजार कर रहा था, खिलाड़ी ने जब उसे देखा तो उसके गले में अपनी माला डाल दी. वैभव सूर्यवंशी से माला पाने के बाद… pic.twitter.com/TsHzO3UzMc
— NBT Hindi News (@NavbharatTimes) April 29, 2026
வைபவ் சூரியவன்ஷியிடமிருந்து எதிர்பாராத விதமாக இந்த அன்பான பரிசைப் பெற்ற அந்தச் சிறுவன், மகிழ்ச்சியில் உறைந்து போனான். அந்தத் தருணத்தில் அந்தச் சிறுவனின் முகத்தில் ஏற்பட்ட ஆச்சரியமும் மகிழ்ச்சியும் பார்ப்பவர்களை நெகிழச் செய்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வரும் நிலையில், “திறமை மட்டும் போதாது, இது போன்ற எளிமையும் மனிதநேயமும்தான் ஒரு வீரரை முழுமையாக்குகிறது” என ரசிகர்கள் வைபவ் சூரியவன்ஷியைப் பாராட்டித் தள்ளுகிறார்கள்.
