தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான ‘பீப்பிள்ஸ் இன்சைடு’ எக்சிட் போல் முடிவுகள் வெளியாகி தகிப்பைக் கிளப்பியுள்ளன.
இக்கணிப்பின்படி, ஆளுங்கட்சியான திமுக கூட்டணி 122 முதல் 140 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் அரியணையில் அமர அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஆனால், இந்தத் தேர்தலின் நிஜமான ‘கேம் சேஞ்சராக’ நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ளது ஒட்டுமொத்த அரசியலையும் உலுக்கியுள்ளது.
முதல் தேர்தலிலேயே சுமார் 40 இடங்கள் வரை தவெக தட்டிச் செல்லும் என கணிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் சகாப்தம் பிறந்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 60 முதல் 70 இடங்களைப் பெறும் என்று கூறப்படும் நிலையில், விஜய்யின் இந்த விஸ்வரூபம் மே 4-ம் தேதி வெளியாக உள்ள உண்மையான முடிவுகள் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
