தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தூக்கமின்மை குறித்து பகிர்ந்துள்ள ஒரு சுவாரஸ்யமான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக ஒரு மணி நேரத் தூக்கத்தை நாம் இழந்தால், அதிலிருந்து உடல் முழுமையாக மீண்டு வர சுமார் 4 நாட்கள் ஆகும் என்று ஒரு தகவல் உண்டு.
இதனைச் சுட்டிக்காட்டியுள்ள த்ரிஷா, தன்னுடைய தூக்கக் கணக்குப்படி பார்த்தால் தான் மீண்டும் புத்துணர்ச்சியாக உணர 2062-ம் ஆண்டு ஆகிவிடும் என நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார்.
படப்பிடிப்புகள் மற்றும் பிஸியான வேலைகளுக்கு இடையே தனக்கு ஏற்பட்டுள்ள தூக்கமின்மை பிரச்சனையைத் த்ரிஷா இப்படி ஜாலியாகப் பகிர்ந்துள்ள நிலையில், இதைப் பார்த்த ரசிகர்கள் “அப்போ அதுவரைக்கும் தூங்க மாட்டீங்களா?” என நக்கலாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
