நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் சர்ச்சைகளுக்கு நடிகை ஷகீலா தனது பாணியில் அதிரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் விஜய் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்யப்போவதாக வதந்திகள் பரவிய நிலையில், திரிஷாவுடன் ஒரு திருமண நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றது பெரும் விவாதமானது. இதுகுறித்து கோபமாகப் பேசியுள்ள ஷகீலா, “விஜய் ஏன் அரசியலுக்கு வந்தார் என்றே தெரியவில்லை, அவர் வந்த பிறகு அவரைப் பற்றி என்னவெல்லாமோ பேசுகிறார்கள்.

ஒரு ஆணும் பெண்ணும் நல்ல நண்பர்களாக இருக்கக் கூடாதா? ஏன் சாதாரண நட்பைக் கூட சந்தேகக் கண்ணோடு பார்க்கிறீர்கள்?” என்று காட்டமாகப் பேசியுள்ளார்.

மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், “அம்மாவுக்குத் திருமணமே ஆகவில்லை, குழந்தைகள் இல்லை. அவரிடம் போய் உங்களுக்குத் தாய்மை பற்றி என்ன தெரியும்? மக்களை எப்படித் தாயாகப் பார்ப்பீர்கள் என எப்போதாவது கேட்க யாருக்காவது தில்லு இருந்ததா?” என அதிரடியாகக் கேள்வியெழுப்பியுள்ளார்.

குடும்ப அரசியல் செய்பவர்களிடம் போய் நாட்டை எப்படிக் காப்பாற்றுவீர்கள் என கேட்க முடியாதவர்கள், விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பேசுவதைக் கடுமையாகச் சாடியுள்ளார் ஷகீலா.