ஐபிஎல் 2026 தொடரில் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, அபார வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றிக்குப் பிறகு அந்த அணியின் கேப்டன் ஷுப்மன் கில் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

அதில் விமானத்தில் பயணம் செய்யும் கில், கையில் ஒரு விசிலை வைத்திருப்பது சிஎஸ்கே-வின் ‘விசில் போடு’ கோஷத்தைச் சீண்டுவது போல் இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் காரசாரமான விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Ꮪhubman Gill (@shubmangill)

அதே சமயம், அந்தப் புகைப்படத்தில் கில் அணிந்திருக்கும் கடிகாரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அது உலகப் புகழ்பெற்ற Rolex Daytona Tiffany ரகக் கடிகாரமாகும். இதன் மதிப்பு சுமார் ₹1.25 கோடி எனக் கூறப்படுகிறது. நீல நிற டயல் கொண்ட இந்த மிக அரிதான வாட்ச், கில்லின் சொகுசு வாழ்க்கைக்குச் சான்றாக அமைந்துள்ளது.

இந்த சீசனில் இதுவரை 7 இன்னிங்ஸ்களில் 330 ரன்கள் குவித்துள்ள கில், ஆரஞ்சு கேப் ரேஸில் 6-வது இடத்தில் உள்ளார். ஆடுகளத்தில் பேட்டிங்கிலும், ஆடுகளத்திற்கு வெளியே தனது ஸ்டைலிலும் ‘கிங்’ ஆக ஜொலித்து வருகிறார் ஷுப்மன் கில்.