தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், தேர்தலுக்குப் பிந்தைய ஆன்மீகப் பயணத்தில் செம பிஸியாக இருக்கிறார். இன்று காலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த விஜய், அடுத்ததாக தனது இஷ்ட தெய்வமான ஷீரடி சாய்பாபாவைத் தரிசிக்கத் தயாராகிவிட்டார்.

முதலில் மே 3-ம் தேதி அவர் ஷீரடி செல்வார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது கிடைத்துள்ள புதிய தகவலின்படி, நாளை காலை 10:30 மணிக்கே அவர் ஷீரடி சாய்பாபா கோயிலில் தரிசனம் செய்ய உள்ளாராம்.

ஏற்கனவே தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டிற்கு முன்னதாக ஷீரடி சென்று ஆசி பெற்ற விஜய், இப்போது தேர்தல் முடிந்த கையோடு மீண்டும் சாய்பாபாவைத் தேடிச் செல்வது அவரது ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் இந்த அடுத்தடுத்த ஆன்மீகப் பயணங்கள் சமூக வலைதளங்களில் தற்போதே ட்ரெண்டாகத் தொடங்கிவிட்டன.