தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கிய விஜய், தனது திரைப்பயணத்தின் உச்சத்திலேயே இனி நடிக்கப்போவதில்லை என்று அறிவித்துவிட்டு முழுநேர அரசியலில் இறங்கினார். அவர் சொன்னது போலவே ‘ஜனநாயகன்’ திரைப்படத்தோடு நடிப்பை நிறுத்திவிட்டு, தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அவர் சென்ற இடமெல்லாம் மக்கள் கடல் போல திரண்டு வந்து ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது தேர்தல் முடிந்து முடிவுகளுக்காக ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவிலும் விஜய்க்கு எந்தளவுக்கு வரவேற்பு இருக்கிறது என்பதற்குச் சான்றாக ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த லாட்டரி வியாபாரி ஒருவர், இந்தத் தேர்தலில் விஜய் வெற்றி பெற்றால் தமிழகத்தில் இருந்து கேரளா வரும் ஒவ்வொருவருக்கும் ஒரு லாட்டரி சீட்டு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், எல்லை தாண்டி கேரளாவிலும் விஜய்க்கு இருக்கும் மாபெரும் செல்வாக்கை இது காட்டுவதாக ரசிகர்கள் உற்சாகத்துடன் பேசி வருகின்றனர்.