இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் எவ்வளவு பிரபலமோ, அதே அளவிற்கு மைதானத்திற்கு வரும் வீரர்களின் மனைவிகளும் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றனர். குறிப்பாக, அவர்கள் அணியும் ஆடம்பரமான வாட்ச்களின் விலை ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்தில் நடந்த போட்டியின் போது, விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா சுமார் 28 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ‘கார்டியர்’ பிராண்ட் வாட்ச் அணிந்து வந்திருந்தார். அதேபோல், தோனியின் மனைவி சாக்ஷி அணிந்திருந்த பச்சை நிற ‘ரிச்சர்ட் மில்லே’ வாட்ச் அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.
எளிமையான சுடிதார் அணிந்து வந்திருந்த சாக்ஷியின் கையில் இருந்த அந்த வாட்ச்சின் விலை சுமார் 3.1 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இது தென் ஆப்பிரிக்க தேசியக் கொடியின் வண்ணங்களைக் கொண்டு, அதிநவீன தொழில்நுட்பத்துடன் மிகவும் லேசான எடையில் உருவாக்கப்பட்டது.
சுவிட்சர்லாந்து நிறுவனமான இது, விளையாட்டு வீரர்களுக்காகவே பிரத்யேகமாக வைர வேலைப்பாடுகளுடன் இத்தகைய வாட்ச்களைத் தயாரிக்கிறது. சாக்ஷி அணிந்திருந்த இந்த வாட்ச்சில் பூட்டுகள் ஏதுமின்றி, கையில் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய எலாஸ்டிக் ஸ்டிராப் பயன்படுத்தப்பட்டிருப்பது இதன் கூடுதல் சிறப்பாகும்.
