ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி, மைதானத்தில் பவுண்டரிகளைப் பறக்கவிடுவது மட்டுமில்லாமல், நிஜ வாழ்க்கையிலும் செம குசும்புக்காரர் என்பதை நிரூபித்துள்ளார்.

சண்டிகர் செல்வதற்காக விமான நிலையத்தில் காத்திருந்தபோது, அவரிடம் செல்ஃபி எடுக்க இரண்டு சிறுவர்கள் ஆசையாக வந்துள்ளனர்.

அவர்களிடம் விளையாட்டாகப் பேச நினைத்த வைபவ், “தம்பி, நான் சும்மா போட்டோ எடுக்க மாட்டேன், ஒரு போட்டோவுக்கு 100 ரூபாய் வாங்குவேன்” என்று முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு கூறியுள்ளார்.

இதை உண்மை என்று நம்பிய அந்தச் சிறுவர்கள், தயக்கமில்லாமல் 200 ரூபாயை எடுத்து வைபவிடம் நீட்டினர். இதைப் பார்த்து சிரித்துவிட்ட வைபவ், “நான் சும்மா விளையாடினேன்” என்று கூறி அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, அவர்களுடன் மகிழ்ச்சியாக செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

15 வயதிலேயே ஐபிஎல் தொடரில் இரண்டு சதங்களை விளாசி சாதனை படைத்துள்ள வைபவ், தற்போது ஆரஞ்சு கேப் (Orange Cap) ரேஸில் 357 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸே, “வைபவ் எனது ஃபேவரிட் பிளேயர்” என்று பாராட்டும் அளவுக்குத் தனது அதிரடி ஆட்டத்தால் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் இந்த இளம் வீரர்.