தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் பிரபல நடிகையான அஞ்சு குரியன், தற்போது கோடை விடுமுறையைக் கொண்டாடுவதற்காக இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவர் அங்கு செய்துகொண்ட ஒரு மசாஜ் குறித்த தகவல் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் பாலி தீவின் சொகுசு விடுதி ஒன்றில் மசாஜ் செய்துகொண்டதற்காக அவர் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 7.25 லட்சத்தை செலவிட்டுள்ளது தற்போது பேசுபொருளாகியுள்ளது. இந்த மசாஜ் செலவு குறித்த ரசீதை அஞ்சு குரியன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

மேலும் அந்த ரசீதில் உள்ள தொகையைப் பார்த்த ரசிகர்கள், “ஒரு மசாஜ் செய்வதற்கு இவ்வளவு பெரிய தொகையா?” என வியப்புடன் கமெண்ட் செய்து வருகின்றனர். கோடை வெயிலுக்கு இதமாக அவர் வெளியிட்ட மசாஜ் வீடியோக்கள் ஒருபுறம் வைரலானாலும், அவர் மசாஜிற்காகச் செலவு செய்த அந்த ‘அம்மாடியோவ்’ ரக கட்டணம் தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக் ஆக மாறியுள்ளது.