ஐபிஎல் 2026-ன் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அதிரடி வீரர் சஞ்சு சாம்சன் (11), சர்ஃபராஸ் கான் (0) மற்றும் டெவால்ட் பிரெவிஸ் (2) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
14.4 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து வெறும் 91 ரன்கள் மட்டுமே எடுத்துத் தடுமாறி வருகிறது. குஜராத் அணியின் ககிசோ ரபாடா மற்றும் முகமது சிராஜ் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சென்னை பேட்டர்கள் திணறி வருகின்றனர். தற்போது கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சிவம் துபே ஜோடி நிதானமாக ஆடி அணியை மீட்கப் போராடி வருகிறது. சேப்பாக்கம் மைதானமே சென்னை அணியின் இந்தத் தடுமாற்றத்தால் நிசப்தமாகிக் காணப்படுகிறது.
