2026 தமிழக சட்டமன்றத் தேர்தலின் மையப்புள்ளியாகத் தளபதி விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (TVK) பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்புக்காகச் சென்னை விமான நிலையம் வந்த மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியிடம், விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் மற்றும் தமிழகத் தேர்தல் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

​இந்தக் கேள்விகளுக்கு மிகவும் நிதானமாகவும், சுருக்கமாகவும் பதில் அளித்த மம்மூட்டி, “ஒன்னும் தெரியாது” என்று சிரித்தபடியே கூறிச் சென்றார். மேலும், தனது உடல்நிலை குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “உடல்நிலை நன்றாக இருக்கிறது” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வரும் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து ஒரு முன்னணி நடிகர் இவ்வாறு கூலாகப் பதில் அளித்திருப்பது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.