ஐபிஎல் 2026 தொடரில் டெல்லி அணிக்கு எதிராக 264 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிப் பிடித்து உலக சாதனை படைத்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றி, சமூக வலைதளங்களில் திக் திக் கொண்டாட்டமாக மாறியுள்ளது.
ஆட்டம் முடிந்ததும் மைதானத்திற்குள் உற்சாகமாக நுழைந்த பஞ்சாப் அணியின் உரிமையாளரும் பாலிவுட் நட்சத்திரமுமான ப்ரீத்தி ஜிந்தா, வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்த இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யாவை கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
அப்போது எதிர்பாராத விதமாக விளையாட்டுத்தனமாக பிரியான்ஷ் ஆர்யாவின் வயிற்றில் ப்ரீத்தி ஜிந்தா குத்த, அந்த இளம் வீரர் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் திகைத்துப்போன வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
𝐔𝐍𝐒𝐓𝐎𝐏𝐏𝐀𝐁𝐋𝐄 @PunjabKingsIPL 🔥🔥
Red-hot #PBKS register the Highest Successful Run-Chase in #TATAIPL history ❤️
Captain Shreyas Iyer remained unbeaten on 7⃣1⃣ to see his side over the line 🫡
Scorecard ▶️ https://t.co/0oSkMZgNAV#KhelBindaas | #DCvPBKS pic.twitter.com/3dVwbjbGV0
— IndianPremierLeague (@IPL) April 25, 2026
“>
பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியான்ஷ் ஆர்யா ஜோடி வெறும் 6.5 ஓவர்களில் 126 ரன்களை விளாசி, பவர் பிளேயிலேயே 105 ரன்கள் குவித்து புதிய வரலாறு படைத்தது. விக்கெட்டுகள் சரிந்த போதும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 71 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
தோல்வியே இல்லாமல் வெற்றிப் பயணத்தைத் தொடரும் பஞ்சாப் அணியின் இந்தச் சாதனையை விட, மைதானத்தில் ப்ரீத்தி ஜிந்தா செய்த அந்த குறும்புத்தனமான செயல் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தையும் சுவாரஸ்யத்தையும் கிளப்பியுள்ளது. “வெற்றி போதையில் ப்ரீத்தி செஞ்ச காரியத்தைப் பாருங்க” என நெட்டிசன்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
