ஐபிஎல் கிரிக்கெட் தொடரில்  அருண் ஜெட்லி மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஷஷாங்க் சிங் செய்த ஒரு பெரிய தவறு அந்த அணியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் டெல்லி வீரர் கேஎல் ராகுல் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை ஷஷாங்க் சிங் நழுவவிட்டார்.

இதைப் பார்த்த பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மிகுந்த கோபமடைந்தார். ஏற்கனவே கடந்த லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஷஷாங்க் சிங் நான்கு கேட்சுகளைத் தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து விளையாடிய கேஎல் ராகுலுக்கு 10-வது ஓவரிலும் ஒரு கேட்ச் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அதையும் விஜய் குமார் வைஷாக் தவறவிட்டார்.
<a href=”http://

“>