படிப்பு மற்றும் கொண்டாட்டங்களில் பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மணமகன் ஒருவர் தனது திருமண ஊர்வலத்தின் போது, கையில் வாணவேடிக்கை துப்பாக்கியை ஏந்தியபடி உற்சாகமாக வந்து கொண்டிருந்தார்.

மேலும் எதிர்பாராத விதமாக, அவர் அந்தத் துப்பாக்கியை இயக்கிய சில நொடிகளிலேயே அது அவர் கையிலேயே பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் மணமகன் மற்றும் அவரைச் சுற்றி இருந்தவர்கள் நூலிழையில் உயிர் தப்பினர். திருமண மகிழ்ச்சி ஒரு நொடியில் பெரும் பதற்றமாக மாறிய இந்த வீடியோ, இணையவாசிகளைப் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

“>

இந்தக் காணொளியைக் கண்ட நெட்டிசன்கள் மணமகனின் இந்த ஆபத்தான முயற்சியைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் பலர் அவரை கிண்டல் செய்யும் விதமா அழைத்து வருகின்றனர். “திருமண வைபவங்களில் இதுபோன்ற தேவையற்ற ஆடம்பரங்களும், ஆபத்தான சாகசங்களும் உயிருக்கே உலைய வைக்கும்” என்று பலரும் எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர் ஒரு சிறப்பான நாளைக் கொண்டாட நினைப்பவர்கள், பாதுகாப்பற்ற இத்தகைய சீனப் பட்டாசுகள் மற்றும் நவீனக் கருவிகளைத் தவிர்ப்பது அவசியம் என்பதை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை நினைவூட்டியுள்ளது.