சமீபகாலமாக இணையதளங்களில் பகிரப்படும் சில வீடியோக்கள் சமூகத்தின் கசப்பான உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அந்த வகையில், விஷால் என்ற ‘X’ பயனர் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று பார்ப்பவர்களைப் பதற வைத்துள்ளது. தனது மனைவி கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தன்னைத் தொடர்ந்து உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி வருவதாகக் கணவர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆதாரத்திற்காகத் தனது மடிக்கணினியில் ரகசியமாகப் படம்பிடிக்கப்பட்ட அந்த வீடியோவில், ஒரு பெண் தனது கணவரைச் சரமாரியாகக் கன்னத்தில் அறைவதும், தலைமுடியைப் பிடித்து இழுத்துத் தாக்குவதும் தத்ரூபமாகப் பதிவாகியுள்ளது. “கடந்த 2 ஆண்டுகளாகப் பொறுத்துக் கொண்ட சகோதரர், இப்போது தான் ஆதாரத்தைப் பதிவு செய்துள்ளார்.

 

திருமணம் செய்வதற்கு முன் இருமுறை யோசியுங்கள்” என்ற கேப்ஷனுடன் பகிரப்பட்ட இந்த வீடியோ, ஆண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை குறித்த விவாதத்தைத் தீயாகப் பரப்பியுள்ளது. “இது பெண் உரிமை அல்ல, இது தாலி கட்டிய பயங்கரவாதம்” என்றும், “ஆண்களுக்கு எதிரான வன்முறை நடக்கும்போது பெண்ணியவாதிகள் எங்கே போனார்கள்?” என்றும் நெட்டிசன்கள் ஆவேசமாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.