திண்டுக்கல்லில் வாக்குப்பதிவு செய்ய வந்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) பட்டனை அழுத்துவதற்குப் பதிலாக சிகப்பு விளக்கை (Light) அழுத்திய சம்பவம் அங்கிருந்தவர்களிடையே சிரிப்பையும் வியப்பையும் ஏற்படுத்தியது. முதலில் ஓட்டு விழவில்லை என்று அவர் புகார் கூறவே, அதிர்ச்சியடைந்த தேர்தல் அதிகாரி இயந்திரத்தைப் பரிசோதித்தபோதுதான் அவர் பட்டனை அழுத்தாதது தெரியவந்தது.
Watch | வாக்குப்பதிவு எந்திரத்தில் பொத்தானுக்குப் பதிலாக, விளக்கை அழுத்திக் கொண்டிருந்த அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன்
வாக்குச்சாவடி அலுவலர் வந்து பொத்தானை அழுத்தக் கூறியதை அடுத்து சரியாக வாக்களித்தார்#SunNews | #TNElectionWithSunNews | #DindigulSeenivaasan pic.twitter.com/5mOYRSGTEU
— Sun News (@sunnewstamil) April 23, 2026
இதனையடுத்து மீண்டும் வாக்களிக்கச் சென்ற அவர், மறுபடியும் சிகப்பு விளக்கையே அழுத்தியுள்ளார். பொறுமை இழந்த அதிகாரி, “சார், பட்டனை அழுத்துங்க சார்!” என்று கையைப் பிடித்துக் காட்டிய பிறகுதான் அவர் தனது வாக்கைச் சரியாகப் பதிவு செய்தார். தேர்தல் பரபரப்புக்கு இடையே திண்டுக்கல் சீனிவாசனின் இந்த ‘லைட்’ மேட்டர் தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.
