ஐபிஎல் 2026 தொடரில் லக்னோவின் இக்கானா மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அபார வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 159 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும், ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களும், குறிப்பாக விக்கெட் கீப்பர் துருவ் ஜூரலும் மின்னல் வேகத்தில் செயல்பட்டு லக்னோவை 119 ரன்களுக்குச் சுருட்டினர். ஆட்டத்தின் திருப்புமுனையாக, ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் மயங்க் யாதவ் கொடுத்த கடினமான கேட்சை ஜூரல் ஒற்றைக் கையால் தாவிப் பிடித்தது அங்கிருந்த அனைவரையும் உறைய வைத்தது.
The brilliance of Dhruv Jurel behind the stumps.
– Jofra Archer and Riyan Parag were totally impressed. 😄🔥 pic.twitter.com/ehPRVohvYO
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 22, 2026
“>
இதுமட்டுமின்றி, கொல்கத்தா போட்டியில் ரவி பிஷ்னோய் வீசிய ஐந்தாவது ஓவரில் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை வெறும் 2 வினாடிகளில் ஜூரல் ‘மின்னல் வேக’ ஸ்டம்பிங் செய்த விதம், கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ். தோனியின் ஸ்டைலை நினைவுபடுத்தியது. தான் ஸ்டம்பிங் ஆனதைக் கூட உணர முடியாமல் கேமரூன் கிரீன் திகைத்து நின்ற வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
