இந்தியாவில் சாகசச் சுற்றுலாக்களின் பாதுகாப்பு குறித்துப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பெண் வழிகாட்டியுடன் பாராகிளைடிங் செய்து கொண்டிருக்கும்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பாராகிளைடர் அங்கிருந்த மரங்களின் மீது மோதி விபத்துக்குள்ளாகிறது.

அதிர்ஷ்டவசமாக அந்தப் பெண் உயிர் தப்பினாலும், முறையான பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் இல்லாமல் இதுபோன்ற ஆபத்தான விளையாட்டுகளில் ஈடுபடுவது எவ்வளவு அபாயகரமானது என்பதை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.
<a href=”http://

 

 

 

இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பார்த்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனர்கள், இந்தியாவில் சாகச விளையாட்டுகள் முறையாகக் கண்காணிக்கப்படுவதில்லை என்று தங்களது கவலைகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தகுதியற்ற நபர்களால் நடத்தப்படும் இதுபோன்ற விளையாட்டுகளில் கலந்துகொள்ளும் முன், பயிற்சியாளரின் அனுபவம் மற்றும் உபகரணங்களின் தரம் ஆகியவற்றைச் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாகச் சரிபார்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். வானிலை மோசமாக இருக்கும்போது விதிகளை மீறிச் செயல்படுவதே இது போன்ற விபத்துகளுக்கு முக்கியக் காரணமாகச்சொல்லப்படுகிறது.