ஐபிஎல் 2026 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸிடம் 99 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. இந்தத் தோல்வியால் அந்த அணியின் ரன் ரேட் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா புகைப்பிடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மைதானத்திற்கு வெளியே அவர் புகைப்பிடித்த காட்சிகள் கேமராவில் சிக்கியதால், ரசிகர்கள் மத்தியில் இது விவாதமாக மாறியுள்ளது. ரபாடா ஏற்கனவே கடந்த ஆண்டு போதைப்பொருள் சோதனையில் சிக்கி ஒரு மாதம் தடை அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

​குஜராத் அணியின் பேட்டிங் வரிசையில் சுப்மன் கில் போன்ற டாப் ஆர்டர் வீரர்கள் சொதப்பினால், மிடில் ஆர்டர் வீரர்கள் அணியை மீட்கத் தவறிவிடுகின்றனர். குறிப்பாக ஷாருக்கான், ராகுல் திவேதியா மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் ரன் குவிக்கத் தடுமாறுவது அந்த அணிக்குத் தொடர் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. அடுத்த போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்ள உள்ள குஜராத், தனது பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் உள்ள தவறுகளைச் சரிசெய்து வெற்றிப்பாதைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.