‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்த விவகாரம் தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எடிட்டர் உமா சங்கர், தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். உண்மையான குற்றவாளியை மறைப்பதற்காகத் தன் மீது வீண் பழி சுமத்தப்பட்டு, திட்டமிட்டு கைது செய்திருப்பதாக அவர் தனது முன்ஜாமீன் மனுவில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இருப்பினும், எடிட்டர் உமா சங்கரின் இந்த வாதத்தை படக்குழுவினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. படத்தின் முக்கிய காட்சிகள் வெளியானதால் ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்த படக்குழுவினருக்கும், கைது செய்யப்பட்ட எடிட்டருக்கும் இடையேயான இந்த மோதல் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
