அமெரிக்காவில் வசிக்கும் சோனாலி என்ற இந்தியப் பெண், வெளிநாட்டிற்குச் செல்பவர்கள் ஏன் மீண்டும் இந்தியா திரும்புவதில்லை என்பதற்கான காரணங்களை விளக்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அந்த வீடியோவில், “வெளிநாட்டில் தூய்மையான காற்று, தரமான உணவு மற்றும் குடிநீர், ஒழுக்கமான பொது வாழ்க்கை முறை போன்றவை கிடைக்கிறது.

ஒருமுறை இந்த அமைதியான மற்றும் வசதியான வாழ்க்கைக்குப் பழகிவிட்டால், மீண்டும் இந்தியாவின் பரபரப்பான சூழலுக்கு வந்து தங்களை மாற்றிக்கொள்வது பலருக்குச் சவாலாக இருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியாவில் இருப்பவர்கள் நினைப்பது போல 5 முதல் 6 கோடி ரூபாய் சம்பாதிப்பது வெளிநாடுகளில் அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்றும், அதற்குப் பல வருட உழைப்பும் பொறுமையும் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.

இவரது இந்தக் கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் குவிந்து வருகின்றன. “அமெரிக்காவில் வசதி இருக்கலாம், ஆனால் இந்தியாவில் மட்டும்தான் உறவுகளும் பாசமும் கிடைக்கும்” என ஒரு தரப்பினரும், “நமது நாட்டில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தாத வரை மக்கள் வெளியேறுவதைத் தடுக்க முடியாது” என மற்றொரு தரப்பினரும் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.