மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் எடுத்துள்ள அதிரடி முடிவு, ஒட்டுமொத்த தொழில்நுட்ப உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் சுமார் 8,000 பணியாளர்களை ஒரே நேரத்தில் பணிநீக்கம் செய்ய அவர் உத்தரவிட்டுள்ளார். மே 20-ஆம் தேதி பாதிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் கடைசி வேலை நாளாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே பொருளாதார மந்தநிலை குறித்த அச்சங்கள் நிலவி வரும் சூழலில், மெட்டா போன்ற ஒரு முன்னணி நிறுவனம் இவ்வளவு பெரிய அளவில் ஆட்குறைப்பு செய்திருப்பது தொழில்நுட்பத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மிகப்பெரிய பணிநீக்க நடவடிக்கையானது, நிறுவனத்தின் லாபத்தை நிலைநிறுத்தவும் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும் எடுக்கப்பட்ட ஒரு “கடினமான முடிவு” என்று தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பல்வேறு கிளைகளில் பணிபுரியும் ஊழியர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அறிவிப்பால் தங்களின் எதிர்காலம் குறித்து ஊழியர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றமானது, மற்ற பெரிய நிறுவனங்களும் இதேபோன்ற நடவடிக்கைகளை எடுக்குமோ என்ற அச்சத்தை மற்ற ஐடி பணியாளர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.
