நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான நீதிமன்ற விசாரணை ஜூன் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே விஜய் – சங்கீதா பிரிந்து வாழ்வதாகத் தகவல்கள் பரவி வந்தன. சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையை ஜூன் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் விஜய் மற்றும் சங்கீதா ஆகிய இருவரும் வீடியோ கால் மூலமாக ஆஜராக அனுமதி கோரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்றைய தினமே இந்த விவகாரத்தில் ஒரு தெளிவான முடிவு எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் விஜய் தனது பெற்றோரைச் சரியாகக் கவனிப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் சமீபத்திய பேட்டியில் அதற்கு விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, விஜய்க்குத் திருமணம் ஆன உடனேயே, அவர் தனித்துவமாக வளர வேண்டும் என்பதற்காகவே நான்தான் அவரைத் தனியாக இருக்கச் சொன்னேன். ஒரு மனிதன் தனியாக நின்றால்தான் முன்னேற முடியும் என்பதால் அந்த முடிவை எடுத்தேன் என்றார்.
விஜயின் விவாகரத்து பற்றி பேசுகையில் எப்போதும் அவர்களுக்குள் சமரசமாகி கையெழுத்தான விஷயத்தை இப்போது எதிர்க்கட்சிகள் அரசியல் லாபத்திற்காக பொதுவெளியில் தேவையில்லாமல் விமர்சனம் செய்வதாகவும் கூறினார். மேலும் இதன் காரணமாக முன்பே விஜய் மற்றும் சங்கீதா இருவரும் பிரிந்து தனித்தனியாக தான் வாழ்ந்து வருகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
