தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தற்போது தமிழகத்தில் நான்குமுனை போட்டிகள் நிலவும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மக்களை கவரும் விதமாக விதவிதமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்த முறையும் ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் நிலையில் மாணவன் ஒருவனுக்கு அவர் பிசிக்ஸ் கிளாஸ் எடுத்தார். வாக்கு சேகரிப்பின் போது அவர் பாடம் எடுத்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பிஎஸ்சி மற்றும் சென்னை சட்ட கல்லூரியில் BL படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.