தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறந்து வரும் நிலையில், நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பரப்புரை செய்த அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர் காளியம்மாள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து பேசிய பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

பரப்புரையில் பேசிய அவர், “நமது முதலமைச்சருக்குச் சொந்தமாக கார் கூட இல்லையாம்.. அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் அப்படித் தான் சொல்லியிருக்கிறார். பரவாயில்லை, இந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, நாங்கள் அவருக்கு ஒரு காரை வாங்கித் தருவோம்.

அந்த காரில் ‘அன்பளிப்பு அதிமுக’ என்று எழுதி அவருக்குப் பரிசாகக் கொடுப்போம்” என நக்கலாகப் பேசினார். முதலமைச்சரின் சொத்து விவரங்களை முன்வைத்து காளியம்மாள் அடித்த இந்த ‘கவுண்டர்’ அரசியல் மேடையில் சிரிப்பலையை ஏற்படுத்தியதோடு, திமுக மற்றும் அதிமுக தொண்டர்களிடையே காரசாரமான விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

“>