தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பிரம்மாண்ட வெற்றி பெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது ஆளும் கட்சிக்கு ஆதரவான அலை வீசி வருவதாகவும், மக்கள் மீண்டும் ஒருமுறை அதிமுக – பாஜக கூட்டணியை நிராகரிக்கத் தயாராகிவிட்டனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
பாஜகவால் தமிழகத்தில் ஒருபோதும் காலூன்ற முடியாது என்று குறிப்பிட்ட அவர், தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுக்காத திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் மிகப்பெரிய ஆதரவை வழங்குவார்கள் எனத் தெரிவித்தார். டெல்லிக்கும் தமிழகத்திற்கும் இடையிலான இந்த போரில், மக்களின் தீர்ப்பு திமுக பக்கமே இருக்கும் என்றும் அவர் தனது பிரசாரத்தில் திட்டவட்டமாகப் பேசியுள்ளார்.
