மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள பஞ்சவடி பகுதியில், பொறியியல் மாணவி ஒருவருக்கு நேர்ந்த கொடுமை ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர வைத்துள்ளது. தன்ஜீர் இனாம்தார் என்ற பொறியியல் மாணவர், தன்னுடன் படிக்கும் மாணவியைக் காதலிப்பதாகக் கூறி கடந்த 2024 ஜூன் முதல் 2026 ஜனவரி வரை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்துள்ளது.
புனே மற்றும் நாசிக்கில் உள்ள பல்வேறு பூங்காக்கள், டைரி பண்ணைகள் மற்றும் லாட்ஜ்களில் வைத்து அந்த மாணவியை மது மற்றும் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாக்கி, தன்ஜீர் அத்துமீறியதாகப் பாதிக்கப்பட்ட மாணவி கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.
மிகவும் அதிர்ச்சிகரமான விஷயமாக, அந்த மாணவியின் கழுத்தில் இருந்த துளசி மாலையை வலுக்கட்டாயமாகப் பறித்தெறிந்த தன்ஜீர், அவரை இஸ்லாம் மதத்திற்கு மாறச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். தான் ‘கஸ்வா-ஏ-ஹிந்த்’ செய்ய விரும்புவதாகவும், உன்னை மதம் மாற்றாமல் விடமாட்டேன் என்றும் மிரட்டியதாக மாணவி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மாணவியின் கழுத்துப் பகுதியில் கடித்துக் குதறிவிட்டு, அதை ‘லவ் பைட்’ என்று கூறி தன்ஜீர் கொண்டாடியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்துப் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, பஞ்சவடி போலீசார் தன்ஜீர் இனாம்தாரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரை ஏப்ரல் 22-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, இது திட்டமிட்டுத் தொடுக்கப்பட்ட பொய் வழக்கு என்றும், இருவரும் காதலித்ததாகவும் தன்ஜீர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டு வருகிறார். மதமாற்றக் கட்டாயம் மற்றும் பாலியல் வன்கொடுமை என இரண்டு கடுமையான பிரிவுகளின் கீழ் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
