திருவள்ளூரில் நடந்த அரசியல் பரப்புரையின் போது, திருமணமான கையோடு புதுமண ஜோடி ஒன்று மணக்கோலத்திலேயே நடிகர் விஜய்யைச் சந்திக்க வந்த நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரசார வாகனத்தில் இருந்த விஜய், அந்த ஜோடியை அன்புடன் அருகில் அழைத்து தனது வேனில் ஏற்றி அவர்களுக்கு வாழ்த்துகளையும் ஆசீர்வாதங்களையும் வழங்கினார்.

​விஜய்யின் இந்த செயலால் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்த அந்த ஜோடி, உற்சாகத்தில் துள்ளிக் குதித்தது. மணமகனின் கையை உயர்த்திப் பிடித்து விஜய் உற்சாகப்படுத்த, மணப்பெண் விசிலடித்துக் கொண்டாடிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.