திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள பச்ச நாச்சி அம்மன் கோவிலுக்கு நடிகர் விஜய் இன்று திடீரென வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். அப்போது அங்கு தனது குடும்பத்தினருடன் வந்திருந்த ஒரு மாற்றுத்திறனாளி சிறுமியைப் பார்த்ததும், விஜய் அவர்கள் செய்த செயல் அங்கிருந்தோரை நெகிழ வைத்தது. அந்தச் சிறுமியைக் கண்டதும் ஓடிச் சென்று அருகில் அமர்ந்த விஜய், “மா… எப்படி இருக்கீங்கமா? நான் தான் விஜய்…” என்று மிகுந்த அன்புடன் நலம் விசாரித்தார்.
மா… எப்படி இருக்கீங்கமா.. நான் தான் விஜய்…. திருச்சி கொட்டப்பட்டு பச்ச நாச்சி அம்மன் கோவிலில் மாற்றுத்திறனாளி சிறுமியை பார்த்ததும் விஜய் செய்த செயல் – இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ#Trichy | #TVKVijay | #Election2026 | #ElectionCampaign | #PolimerNews pic.twitter.com/OB6zYehQe0
— Polimer News (@polimernews) April 19, 2026
அதுமட்டுமின்றி, அந்தச் சிறுமியின் தலையை வருடி முத்தமிட்டு, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். ஒரு உச்ச நட்சத்திரம் என்ற அலட்டிக்கொள்ளாமல், ஒரு சாதாரண மனிதராக அந்தச் சிறுமியிடம் அவர் காட்டிய அன்பு குறித்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி, ரசிகர்களின் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.
