ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், அந்த அணியின் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் மின்னல் வேகத்தில் செய்த ஸ்டம்பிங் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கொல்கத்தா அணி 156 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிக்கொண்டிருந்தபோது, ரவி பிஷ்னோய் வீசிய 5-வது ஓவரில் கேமரூன் கிரீன் இறங்கி வந்து அடிக்க முயன்றார். பந்து ஒயிட் திசையில் சென்றாலும், துருவ் ஜூரல் கண்ணிமைக்கும் நேரத்தில் பந்தைப் பிடித்து ஸ்டம்பிங் செய்தார்.
இது எவ்வளவு வேகமாக நடந்தது என்றால், தான் அவுட் ஆனதே தெரியாமல் கேமரூன் கிரீன் திகைத்து நின்றார். தோனியால் கூட இவ்வளவு துல்லியமான நேரக்கணிப்பில் ஸ்டம்பிங் செய்திருக்க முடியுமா என்று சொல்லும் அளவுக்கு இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 155 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 39 ரன்களும், வைபவ் சூர்யவன்ஷி 46 ரன்களும் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தாலும், அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
THAT’s SOME STUMPING! 🤯
🎥 Dhruv Jurel off balance & diving away from the stumps but hits the target 🎯
Updates ▶️ https://t.co/776nTdPbPj#TATAIPL | #KhelBindaas | #KKRvRR | @rajasthanroyals pic.twitter.com/lqjSajx2iO
— IndianPremierLeague (@IPL) April 19, 2026
“>
துருவ் ஜூரல், ரியான் பராக், ஹெட்மயர் என முக்கிய வீரர்கள் ஏமாற்றம் அளித்ததால் ராஜஸ்தான் அணியால் பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை. இருப்பினும், பேட்டிங்கில் கோட்டை விட்ட துருவ் ஜூரல், விக்கெட் கீப்பிங்கில் தனது அபாரமான திறமையால் ஆட்டத்தின் போக்கையே மாற்றி ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.
