அமெரிக்காவின் மிகச்சிறந்த மற்றும் உண்மையான நட்பு நாடாக இஸ்ரேல் திகழ்வதை அந்த நாடு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், இஸ்ரேல் மக்கள் துணிச்சலானவர்கள் மற்றும் மிகுந்த விசுவாசம் கொண்டவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மற்ற நாடுகள் நெருக்கடியான நேரங்களில் பின்வாங்கினாலும், இஸ்ரேல் எப்போதும் அமெரிக்காவிற்கு உறுதுணையாக இருந்து தனது வலிமையை வெளிப்படுத்துவதாக அவர் பாராட்டியுள்ளார். முக்கியமாக, ஈரான் உடனான மோதல் மற்றும் ஹார்முஸ் நீர்சந்தி விவகாரங்களில் மற்ற நாடுகள் ஒத்துழைக்கத் தயங்கிய நிலையில், இஸ்ரேல் காட்டிய உறுதிப்பாட்டை டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் கடினமான சூழல்களை எதிர்கொள்வதும், அதில் எப்படி வெற்றி பெறுவது என்பதும் இஸ்ரேலுக்கு நன்றாகத் தெரியும் என்று அவர் தனது பதிவில் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். உலக நாடுகள் பலவும் தயக்கம் காட்டிய தருணத்தில், இஸ்ரேல் காட்டிய இந்த விசுவாசம் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.