பழனியில் சிபிஎம் வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த நடிகர் பிரகாஷ் ராஜ், தவெக தலைவர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “சினிமாவில் நீங்கள் ஆஸ்கார் வாங்கினால் கூட முதலில் விசில் அடிப்பவன் நான் தான். ஆனால், ஒரு நாட்டை உங்கள் கையில் ஒப்படைக்க நீங்கள் என்ன நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறீர்கள்?” என்று அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
”காந்தி போன்ற தலைவர்கள் மக்களுக்காகப் போராடி, அடிபட்டு அந்த நம்பிக்கையைச் சம்பாதித்தார்கள். ஆனால், நீங்கள் வந்த உடனே நான் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று கேட்டால், அரசியல் என்பது விழுவதற்கு லாட்டரி சீட்டா? வெறும் சினிமா செல்வாக்கை வைத்துக்கொண்டு ஆட்சிக்கு வர நினைப்பது முறையல்ல. பொறுப்பும், மக்களின் நம்பிக்கையும் மிக முக்கியம்” என்று பிரகாஷ் ராஜ் பேசியது தற்போது தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
