தருமபுரியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சவுமியா அன்புமணியை ஆதரித்து, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு கொண்டு வரும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் எந்த மாநிலத்திற்கும் பாதிப்பு ஏற்படாது என்றும், இது குறித்துப் பரப்பப்படும் தகவல்கள் தவறானவை என்றும் விளக்கமளித்தார்.

தொடர்ந்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளைக் கடுமையாக விமர்சித்த அண்ணாமலை, பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவைத் தோற்கடித்த அவர்களுக்குத் தாய்மார்கள் யாரும் வாக்களிக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி செய்த அதே தவறுகளைத் தற்போது முதல்வர் ஸ்டாலினும் திட்டமிட்டுச் செய்து வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், இந்தத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று பேசினார்.