தமிழகத் தேர்தல் களத்தில் திமுக-விற்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து நடிகை ஆர்த்தி காரசாரமாகப் பட்டியலிட்டுள்ளார். நாம் போடும் ஒவ்வொரு ஓட்டும் வெறும் காகிதம் அல்ல, அது நம் குடும்பத்தின் எதிர்காலம் என்று குறிப்பிட்ட அவர், அனுபவமே இல்லாதவர்களிடம் நாட்டை ஒப்படைப்பது மிகப்பெரிய ஆபத்தில் முடியும் என்று எச்சரித்தார். தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுமென்றால் மக்கள் புத்திசாலித்தனமாகச் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

​ஆண்களின் நல்வாழ்வு மற்றும் குடும்பங்களின் பொருளாதார வளர்ச்சிக்காக 24 மணி நேரமும் உழைக்கும் முதலமைச்சர் ஸ்டாலினின் கைகளை மக்கள் வலுப்படுத்த வேண்டும் என்று ஆர்த்தி கேட்டுக்கொண்டார். ஒரு பாதுகாப்பான வாழ்வையும், உண்மையான மாற்றத்தையும் விரும்பும் ஒவ்வொரு பெண்ணும் வரும் 23-ஆம் தேதி உதயசூரியன் சின்னத்திற்கே வாக்களிக்க வேண்டும் என அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆர்த்தியின் இந்த ஆவேசமான பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.