திமுக சார்பாக பிரச்சாரம் செய்த நடிகை ஆர்த்தி, நடிகர் விஜய்யின் அரசியல் அணுகுமுறையை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். “யார்கிட்டயும் பேச மாட்டாராம், ஆனா மக்கள் அவர் முகத்தைப் பார்த்து ஓட்டுப் போடணுமாம்.. இது எப்படிச் சாத்தியம்?” என்று கேள்வி எழுப்பிய ஆர்த்தி, 75 வருடம் பாரம்பரியம் கொண்ட கட்சியை நடத்தி, 24 மணி நேரமும் மக்களுடன் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் எங்கே, வெறும் மூன்று மணி நேரம் மட்டும் வந்துவிட்டுச் செல்பவர் எங்கே என்று ஒப்பிட்டுப் பேசினார். இது அனுபவத்திற்கும் அகங்காரத்திற்கும் இடையிலான போட்டி என்று அவர் அதிரடியாகக் குறிப்பிட்டார்.
விஜய் இப்போதுதான் அரசியலில் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்துள்ளார் என்றும், அவர் ராக்கெட் வேகம் எடுக்க இன்னும் பல காலம் ஆகும் என்றும் ஆர்த்தி விமர்சித்தார். “முதலில் அவர் அரசியல் கத்துக்கட்டும், அதுவரை நம் மக்களின் வாழ்க்கையை அவரிடம் கொடுத்து அடகு வைக்க முடியாது” என்று பொளேர் எனப் பேசிய அவர், மக்கள் அனுபவத்திற்கே வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். விஜய்யின் மௌனத்தை மையமாக வைத்து ஆர்த்தி பேசிய இந்த வீடியோ, தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளது.
