பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படம் ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் வெளியான ‘ஜன நாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்தது குறித்து விக்னேஷ் சிவன் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

இரண்டு படங்களுக்கும் பிரதீப் ராகவ் தான் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்துப் பேசிய விக்னேஷ் சிவன், படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ் மிகவும் நேர்மையானவர் என்றும், அவர் மீது தமக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.

எல்.ஐ.கே. படத்தின் காட்சிகளைத் தமக்கு அனுப்பும்போதே அவர் மிகுந்த பாதுகாப்புடன், பாஸ்வேர்டு போட்டுத்தான் அனுப்புவார் என்று குறிப்பிட்ட அவர், ஜன நாயகன் படம் லீக் ஆனதற்கு படத்தொகுப்பாளர் தரப்பில் தவறு நடந்திருக்க வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதற்குக் காரணமானவர்கள் யார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளதாகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்