உத்தரப் பிரதேச மாநிலம் குஷினகர் பகுதியில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் சுரேந்திர சிங் என்பவர் “மாங்காய் தருகிறேன்” என்று ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார்.
இதில் சிறுமி மயக்கமடைந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் நயீமுதீன் மீது சந்தேகப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனால் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டார். இருப்பினும், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றபோது உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
அந்தச் சிறுமி தன்னிடம் அநாகரிகமாக நடந்துகொண்டது பக்கத்து வீட்டுக்காரர் சுரேந்திர சிங் தான் என்பதைத் தெளிவாகக் கூறினார். இதையடுத்து, எவ்விதத் தப்பும் செய்யாத தலைமை ஆசிரியர் நயீமுதீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நீக்கப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டார். உண்மையான குற்றவாளியான சுரேந்திர சிங் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஒரு அப்பாவி ஆசிரியர் மீது வீண் பழி சுமத்தப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
