அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள அமேசான் நிறுவனத்தின் மிகப் பெரிய கிடங்கில், பணியில் இருந்த ஊழியர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘PDX9’ என்ற அந்த கிடங்கில் ஊழியர் உயிரிழந்த பிறகும், மீட்புக் குழுவினர் அவரை மீட்க முயன்ற போதும்கூட, மற்ற பிரிவுகளில் பணிகள் நிறுத்தப்படாமல் வழக்கம்போல் தொடர்ந்ததாக சக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கிடங்கிற்குள் போதிய காற்றோட்டம் இல்லாததும், அதிகப்படியான வெப்பமுமே இந்த மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அமேசான் நிர்வாகம் அன்றைய இரவு நேரப் பணிகளை ரத்து செய்து ஊழியர்களுக்கு விடுமுறை அளித்தது. இருப்பினும், இந்த குறிப்பிட்ட கிடங்கு ஏற்கனவே அதிக விபத்துக்கள் நடக்கும் இடமாகப் பட்டியலிடப்பட்டுள்ளதால் பாதுகாப்பு குறித்த கவலைகள் எழுந்துள்ளன.
JUST IN: 🇺🇸 Amazon warehouse staff in Oregon continued sorting packages near a deceased coworker for over an hour on April 6. pic.twitter.com/8WGvFy2RjF
— BRICS Monitor (@BRICStracker) April 13, 2026
“>
மாகாண பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகம் இது குறித்து முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது. உயிரிழந்த ஊழியரின் அடையாளம் மற்றும் மரணத்திற்கான முறையான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
