சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வரும் ஒரு வைரல் வீடியோவில், வீட்டில் வேலை செய்யும் பெண்ணுக்கு அவரது உரிமையாளர் ஏர் கூலர் ஒன்றை பரிசளிக்கும் காட்சி பலரது இதயங்களை வென்றுள்ளது. அந்தப் பெண் சமையலறையில் வழக்கம்போல வேலை செய்து கொண்டிருந்தபோது, வீட்டின் உரிமையாளர் அவரை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த பெரிய பெட்டியைக் காட்டுகிறார்.

மேலும் அதில் தனக்காகப் புதிய ஏர் கூலர் இருப்பதை உணர்ந்த அந்தப் பெண், அளவற்ற மகிழ்ச்சியில் சிறு பிள்ளையைப் போல துள்ளிக்குதித்து, தனது எஜமானியை நெகிழ்ச்சியுடன் கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்துகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Coco & Chico 🐾 (@lifeofcocoandchico)

“>

இந்த நெகிழ்ச்சியான தருணத்தைப் பகிர்ந்த உரிமையாளர், “எங்கள் வீட்டையும் எங்களுடைய செல்லப் பிராணிகளையும் தன் சொந்தக் குழந்தைகளைப் போல அவர் கவனித்துக் கொள்கிறார்; எனவே அவரும் இத்தகைய மகிழ்ச்சியான தருணங்களுக்குத் தகுதியானவர்” என்று குறிப்பிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் பணம் மற்றும் வேலையைத் தாண்டி, ஒருவருக்கொருவர் காட்டும் மனிதநேயமும் மரியாதையுமே உண்மையான மகிழ்ச்சி என்பதை இந்த வீடியோ சமூக வலைதளவாசிகளுக்கு உணர்த்தியுள்ளது. திரையில் தோன்றும் அந்தப் பெண்ணின் உண்மையான மகிழ்ச்சியும் நன்றியுணர்வும் பலரையும் கண் கலங்கச் செய்துள்ளது.