கிரேட்டர் நொய்டா அருகே நேற்று காலை இரண்டு பள்ளி பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 12-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். ஜீசஸ் மேரி பள்ளி பேருந்து மற்றும் ராம் யக்யா பள்ளி பேருந்து ஆகியவை மோதிய இந்த விபத்தில், பேருந்துகளின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. விபத்தின் போது ஒரு பேருந்தில் 25 குழந்தைகள் இருந்தனர், மற்றொரு பேருந்து காலியாக இருந்தது.
பயங்கர சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து, காயமடைந்த குழந்தைகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அதிவேகமாக வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததே இந்த விபத்திற்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது.
<a href=”http://
👉ग्रेटर नोएडा में दर्दनाक घटना, CCTV मे कैद
👉दो स्कूल बसों की भीषण टक्कर,
👉12 से ज्यादा मासूमों को आई गंभीर चोटें; मची चीख-पुकार#GreaterNoida pic.twitter.com/LgBcdXJQoH— Journalist Ravendra kumar (@Chhotukingoffi1) April 13, 2026
“>
இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிக்கிக்கொண்ட பேருந்து ஓட்டுநரும் நீண்ட போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார்.
