மத்தியப் பிரதேச மாநிலத்தில், காதலனைத் திருமணம் செய்துகொள்வதற்காக 19 வயதுக்கும் குறைவான சிறுமி ஒருவர் தனது பெற்றோருக்கு உணவில் விஷம் வைத்துக் கொல்ல முயன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தனது காதலன் சுதாமாவுடன் சேர்ந்து திட்டம் தீட்டிய அந்தச் சிறுமி, வீட்டில் சப்பாத்தி செய்யும்போது அதில் எலி விஷத்தைக் கலந்து கொடுத்துள்ளார்.
உணவைச் சாப்பிட்ட பெற்றோர் மயங்கி விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
<a href=”http://
#WATCH | Minor Girl Mixes Rat Poison In Parents’ Meal To Marry Boyfriend In Morena; Audio Recording Reveals Truth, Parents Critical #MPnews #MadhyaPradesh pic.twitter.com/s0w6aPmPsV
— Free Press Madhya Pradesh (@FreePressMP) April 12, 2026
“>
இந்தச் சம்பவம் குறித்துபோலீஸார் விசாரணை நடத்தியபோது, சிறுமியும் அவரது காதலனும் பேசிக்கொண்ட ஆடியோ பதிவு ஒன்று சிக்கியது. அதில், “இன்று நான் தான் சப்பாத்தி செய்கிறேன், இதுதான் சரியான சந்தர்ப்பம், விஷத்தை வாங்கி வா” என்று அந்தச் சிறுமி தனது காதலனிடம் கூறுவது பதிவாகியுள்ளது.
இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சிறுமி மற்றும் அவரது காதலன் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
