குருகிராமில் வசிக்கும் அனுஷ்கா என்ற பெண், தனது குடும்பத்தின் ஒரு மாத கால வீட்டுச் செலவுகள் குறித்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இது நகர்ப்புறங்களில் வசிக்கும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அவர் கூறுகையில், ஒரு செமி-பர்னிஷ்டு 2BHK வீட்டிற்கு வாடகையாக ₹37,000 செலுத்துவதாகவும், வீட்டு வேலை செய்பவருக்கு ₹2,500 மற்றும் மளிகைப் பொருட்களுக்கு மட்டும் மாதம் ₹10,000 முதல் ₹15,000 வரை செலவாவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் இதர செலவுகளான பெட்ரோலுக்கு ₹6,000 முதல் ₹8,000 வரையும், மின்சாரம் மற்றும் இதர பயன்பாட்டு கட்டணங்களுக்கு ₹5,600 செலவாவதாகவும் அவர் கூறியுள்ளார். இது தவிர ஷாப்பிங் மற்றும் வெளியில் சென்று உண்பதற்கு சுமார் ₹15,000 செலவிடப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Kokoro Living by Anushka (@kokoroliving_byanushka)

“>

ஒட்டுமொத்தமாக ஒரு தம்பதியினருக்கு குருகிராம் போன்ற நகரத்தில் வாழ மாதம் ₹75,000 முதல் ₹80,000 வரை செலவாகும் என்ற இந்த கணக்கீடு, தற்போதைய விலைவாசி உயர்வை வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.